தமது வாகனம் சட்டவிரோத வாகனம் அல்ல - சுஜீவ சேனசிங்க
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசியப் பட்டியல் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்கவுக்கு சொந்தமான வாகனம் முறையாக பெறப்பட்ட வாகனம் என்று அரசப் பகுப்பாய்வாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் நேற்று (08.11.2024) அரசாங்க பகுப்பாய்வாளரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமது வாகனம் சட்டவிரோதமாக பெறப்பட்ட வாகனம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், அதனை அரச பகுப்பாய்வாளரால் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் விரும்பினர்.
சுஜீவ சேனசிங்க எச்சரிக்கை
இந்தநிலையில், தமது வாகனம் உண்மையானது என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் தம்மிடம் திருப்பித் தரப்பட்டதாக சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சில ஆடைகள் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, சேனசிங்கவின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

எனினும், அதன்போது எவ்வித பொருட்களும் கண்டறியப்படவில்லை. இந்தநிலையில், குறித்த தேடுதலுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மற்றும் அவதூறு வழக்குகளை தொடரப்போவதாக சுஜீவ சேனசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam