கோடீஸ்வர வர்த்தகரின் மகளின் தவறான முடிவு - பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்
கண்டி, கலஹா பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் குளியலறையில் உடலில் தீ வைத்து உயிரை மாய்த்துள்ளார்.
மாணவிக்கு ஏற்பட்ட காதல் தொடர்பை பெற்றோர் எச்சரித்தமையால் கோபமடைந்த மாணவி இந்த செயலை செய்துள்ளார்.
அவர் கண்டி பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி கலஹா பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடையவராகும். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.
அவர் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார். அவர் கோடீஸ்வரரின் மகள் என தெரியவந்துள்ளது. அவரது தாய் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் தந்தை கலஹா பிரதேசத்தை சேர்ந்த பிரபலமான வர்த்தகர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவி வீட்டிற்கு தெரியாமல் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்த கையடக்க தொலைபேசியில் இருந்த குறுந்தகவல் ஒன்று அவரது சகோதரர் மற்றும் பெற்றோரிடம் சிக்கியுள்ளது. இதன் மூலம் காதல் தொடர்பு இருக்கும் விடயத்தை அறிந்து கொண்ட பெற்றோர் அவரை கடுமையாக எச்சரித்தமையினால் அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குளியலறைக்கு சென்று 3 லீட்டர் மண்ணெண்யை உடலில் உற்றி தீ வைத்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி கண்டி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியும் அதே பாடசாலையில் கல்வி கற்பதாக தெரியவந்தமையினால் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்ப்பு உள்ளதென பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
