நிதியமைச்சின் செயலாளரின் வீட்டை எரிக்க திட்டமிட்ட சுகீஸ்வர பண்டார! துரத்தியடிக்கப்பட்டதன் பின்னணி
பத்தரமுல்ல பகுதியில் போராட்டமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அப்போதைய செயலாளர் சுகீஸ்வர பண்டார பிரதேசவாசிகளால் துரத்தியடிக்கப்பட்டுள்ளமையானது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன்போது, சுகீஸ்வர பண்டாரா உள்ளிட்ட தரப்பினர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர்கள் ஹக்கர்களுக்கு சென்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சின் செயலாளரின் இல்லத்திற்கு முன்பதாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை விமர்ப்பதானால் பொதுவாக விமர்சிக்க வேணடும், இவ்வாறு தனிநபர்கள் வீட்டுக்கு செல்வதன் பின்னணி என்ன என்ற கேள்வியெழும்புகின்றது.
அரகல காலத்தில் ஓடி ஒழிந்த இந்த ராஜபக்ச தரப்பினர் தற்போதைய அரசாங்கத்தை குழப்புவதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.
நிதியமைச்சின் செயலாளரின் இல்லத்திற்கு இவர்கள் தீ வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.அது தொடர்பில் அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி...