“TWO KINGS” வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள ட்ரம்பின் புகைப்படம்
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துக் கொண்டு அமெரிக்க காங்கிரஸ் (US Capitol) நோக்கி புறப்பட்டு சென்ற சில நேரத்திலேயே, வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) கணக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.
குறித்த பதிவில் “TWO KINGS” (இரு மன்னர்கள்) என்ற தலைப்பும் இடப்பட்டுள்ளது.
இரு மன்னர்கள்
இந்த செய்தி, ட்ரம்ப் அதிகாரமயமான ஆட்சி நடத்த விரும்புகிறார் என்று விமர்சிக்கும் அமெரிக்காவின் சில லிபரல் தரப்பினரை கிண்டல் செய்வதற்காகவே இடப்பட்டதாக கருதப்படுகிறது.
TWO KINGS. 👑 pic.twitter.com/iPVUxc4i4H
— The White House (@WhiteHouse) April 28, 2026
கடந்த ஒரு ஆண்டில் பல முறை, ட்ரம்ப் எதிர்ப்பு போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் “No Kings” (அரசர்கள் வேண்டாம்) என்ற பதாகைகளுடன் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் சமூக ஊடகப் பதிவுகள் பெரும்பாலும் எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
ட்ரம்ப் ஏற்கனவே பலமுறை “அரசர் போன்ற அதிகாரம் கொண்டவர்” என உருவகப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.