பேரினவாத வன்மத்தை கக்கும் சரத் வீரசேகர: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு(Video)
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம்(23.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, முல்லைதீவு மாவட்ட நீதிபதியை மனநோயாளி என்று விழித்து வன்மத்தை கக்கியிருக்கின்றார்.
இது நாகரீக மனித குலத்தினாலும், ஜனநாயக சமூகத்தினாலும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.
இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன், சரத் வீரசேகரவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவருடைய செயற்பாடுகளை தடுக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரி நிற்கின்றோம்.
சரத் வீரசேகரவின் கருத்துக்களை பார்க்கின்ற பொழுது, அவை தற்செயலாக முன்வைக்கப்படுகின்ற கருத்துகளாக நாங்கள் பார்க்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
