பிள்ளையானையும் வியாழேந்திரனையும் பார்த்து திருந்துங்கள்! ஆளும் தரப்பிடம் சுகாஸ் சுட்டிக்காட்டு
’’பிள்ளையானும் வியாழேந்திரனும் கம்பி எண்ணுவதை பார்த்தும் சிலர் இன்னும் மட்டக்களப்பில் திருந்தவில்லை’’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இன்று மகிந்தவினுடைய மறுபுறமான ஜே.வி.பி யுடன் சிலர் கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கின்றனர்.
டக்ளஸ் தேவானந்தா
இன்று ஜே.வி.பி க்கு கூசா தூக்குகின்ற காவடி எடுக்கின்ற சகோதர்களுக்கு நாங்கள் அனுதாபத்துடன் சொல்லுகின்றோம். இன்றைக்கு பிள்ளையானுக்கு வியாழேந்திரனுக்கு நடந்து கொண்டிருப்பது நாளைக்கு வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நடக்கபோவது உங்களுக்கும் நடக்கும்.
அன்று மகிந்தவோடு இருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது இன்று என்.பி.பியோடு இருக்கின்ற உங்களுக்கு நாளைக்கு நடக்கும்.
சிந்தியுங்கள், இனத்தை காட்டிக் கொடுக்காதீர்கள். ஏன் என்றால் எமது இனத்தின் வரலாறு இரத்தத்தாலும் மரணங்காலாலும் விதைக்கப்பட்டது.
உலக்திலே எந்தவொரு நாட்டினுடைய தலைவர்களும் எந்த வொரு போராளி தலைவரும் தனது குடும்பத்தோடு யுத்தம் நடந்த பூமியிலே இறுதிவரை இருந்த வரலாறு கிடையாது.
ஆனால் எற்களுடைய தலைவன் இருந்தான் அந்த தலைவனுக்கு ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் அவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மண்ணிலே இருந்தனர்.
எனவே அந்த மண்ணில் இருந்தவர்கள் தயவு செய்து துரோகம் செய்யாதீர்கள்’’ என கூறியுள்ளார்.
மேலும் ஊர்காவற்துறை பகுதியில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தி - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 19 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
