திடீரென அதிகரித்த சீனியின் விலை
கொழும்பு - புறக்கோட்டை சந்தையில் சீனியின் விலை இன்று (23.03.2024) சடுதியாக அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 20 முதல் 25 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சந்தையில் 255 ரூபாவில் காணப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் விலை இன்று 275 - 280 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.
எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு
எனினும், சீனியின் இந்த சடுதியான விலையேற்றத்துக்கு காரணம் தொடர்பில் புறக்கோட்டை வர்த்தகர்கள் எவ்வித தகவலையும் வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மைய நாட்களில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணாமாக சீனியின் விலை அதிகரித்திருக்கலாம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசோலா சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குற்றச்சாட்டை சுங்க அதிகாரிகள் மருத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |