பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடி
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி குழுவின் தலைவரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும, நேற்று (22) இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பொலித்தீன் பைகளை எடுத்துச்செல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி வழங்குவதற்கு முக்கிய விற்பனை நிலைய (சுப்பர் மார்க்கெட்) உரிமையாளர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதேவேளை, பிளாஸ்டிக் போத்தல்களில் கியுஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிப்பதற்காக சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்கள் மற்றும் நீர் மற்றும் பான உற்பத்தியாளர்கள் குழுவின் முன்னிலையில் கடந்த 2 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
