சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சீனியின் விலை மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகரிப்பு
தாய்லாந்திலிருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் விலைகள் மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடுகின்றனர்.
சீனியின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாவினால் உயர்வடையும் என எதிர்வு கூறியுள்ளனர்.
தற்பொழுது நாட்டில் ஒரு கிலோகிராம் சீனி 265 ரூபா முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
சீனி உள்ளிட்ட சில பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதனை இந்தியா இடைநிறுத்திக் கொண்டதனால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட ஏற்றுமதி
உக்ரைன் போர் உள்ளிட்ட சில காரணிகளினால் இந்தியா சீனி, கோதுமை தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டுள்ளது.
எவ்வாறெனினும், மாலைதீவு, பங்களாதேஷ், மியன்மார் உள்ளிட்ட சில நாடுகள் ராஜதந்திர ரீதியில் அணுகி இந்தியாவிடம் சீனி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவிதமாக இலங்கையும் இந்தியாவிலிருந்து சீனியை இறக்குமதி செய்து கொள்ள ராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.