காசாவில் தொடரும் அவலம்.. நடைமுறையில் உள்ள அர்த்தமற்ற போர்நிறுத்தம்!
கடந்த ஒக்டோபர் மாதம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து குறைந்தது, 373 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 970 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70,360 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 171,047 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதல்கள்
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதிலும், அத்தியாவசிய மருந்துகளில் 52 சதவீதமும், ஆய்வக நுகர்பொருட்களில் 70 சதவீதமும் கையிருப்பில் இல்லை என்றும் அது மேலும் கூறியது.

காசாவில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் காசா மீதான தாக்குதல்கள் தொடர்நது முன்னெடுக்கப்பட்டுதான் கொண்டிருக்கின்றது.
மேலும், போர்நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர், 373 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 970 பேர் காயமடைந்துள்ளமையானது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் ஒரு அர்த்தமற்றது எனவே சிந்திக்க வைக்கின்றது.