யாழில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம்(Jaffna) - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம்(25.08.2024) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவர் திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம் பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன் போது காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam