யாழில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
யாழ்ப்பாணம் (Jaffna) - குறிகட்டுவானில் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொதுமகன் ஒருவரை தாக்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு (24) மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, வீதியில் சென்ற பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர்மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு ஆள் பிணைகள்
இந்நிலையில், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அந்தவகையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
இதற்கமைய, அந்த பொலிஸ் உத்தியோகத்தரை தலா ஒரு இலட்சம் பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டதுடன் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
