மலேசியாவில் இந்திய பெண்ணுக்கு நடந்த துயரம்
மலேசியாவின் - கோலாலம்பூரில் நடந்த சம்பவத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சித்தூர் மாவட்டத்தின் அனிமிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய விஜயலட்சுமி, அங்குள்ள நடைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாதை திடீரென இடிந்து விழுந்தமையினால், அவர் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அருகில் இருந்த விஜயலட்சுமியின் கணவர் மற்றும் மகன் உயிர் தப்பியுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள பொது அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும், சனிக்கிழமை(24) மாலை வரை குறித்த பெண் தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் வியாபாரத்தின் காரணமாக மலேசியாவுக்கும் பயணம் செய்து வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்து வெளிநாட்டுப் பிரதேசம் (APNRT) அமைப்பின் அதிகாரிகளுக்கு, மீட்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கல்வி மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷுடன் இணைந்து முதல்வர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
