வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலையின் தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் விளையாட்டு போட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இன்று (29.03.2023) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வளாகத்தை சுற்றி பார்வையிட்டுள்ளார்.
தேவைகள் தொடர்பான மகஜரை பெற்றுள்ளார்
தொடர்ந்து பாடசாலையின் தேவைகள் தொடர்பாக அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன், அதிபர் அவர்களிடம் இருந்து பாடசாலையின் தேவைகள் பற்றிய மகஜரை பெற்று மாணவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர்
சுரேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
