இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்காவுக்குக் கிடைத்த முக்கிய உளவுத் தகவல்
மூன்று நாட்கள் நீடித்த தீவிரமான மற்றும் அதிகரித்த போருக்கு பிறகு, ஒருவருக்கொருவர் எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை கடந்த (மே 10, 2025) அறிவித்தன.
இதில் குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே "போர் நிறுத்தம்" என்ற அறிவிப்பை முதலில் வெளியிட்டது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான்.
அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட இரு நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து இந்த ஒப்பந்தத்தை எட்டியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்த புரிதலை அடைய அமெரிக்க அதிகாரிகள் பின்னின்று 'உதவியதாகவும்' அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போதைய மோதல் ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்டது என கூறப்பட்டாலும், இதன் தீவிரம் இரு நாடுகளுக்கிடையில் மோதலை வலுபெற வைத்தது என்றே கூறவேண்டும்.
இந்நிலையில் இரு நாடுகளும் தனது தீவிரத்தன்மையை வெளிக்கட்டிய சந்தர்ப்பத்தில் அமெரிக்கா திடிரென உள்நுழைந்து போர்நிறுத்தத்தை அறிவிக்க முக்கிய உளவுத்தகவல் கிடைக்கப்பெற்றதான கருத்துக்களும் வெளிவருகின்றன.
அவ்வாறென்றால் இந்த தீவிரத்தன்மைய அமைதிப்படுத்த அமெரிக்கா முயல்வதன் நோக்கம் என்ன? மேலும் இந்தியா பாகிஸ்தான் தனது நிலைபாடுகளை வெளியிடும் முன்னரே அமெரிக்காவிடம் இருந்து சமாதான நிலைபாடு வெளிவர காரணம் என்ன?
இதன்படி குறித்த விடயங்களை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |