தென் கொரியாவில் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த இராணுவச் சட்டம்
புதிய இணைப்பு
தென்கொரியாவில் (South Korea) நேற்று (03) இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.
முன்னதாக, இந்த அவசர நிலை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.
அத்துடன் . எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த சில மணி நேரங்களில், அவசர நிலை அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அவசரக்கால இராணுவச் சட்டம்
கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை தாக்கல் செய்வதில் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையிலேயே, கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசர நிலையை நடைமுறைபடுத்துவதாக ஜனாதிபதி யூன் சுக் அதிரடியாக அறிவித்திருந்தார்.
வட கொரியாவின் கொம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் தாம் அவசரக்கால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக, தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
முதலாம் இணைப்பு
தென் கொரியாவில் (South Korea) தற்போது அவசரகாலநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தும் வகையில் இராணுவ சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தென் கொரியாவில் தற்போது இடம்பெற்று வரும் கம்யூனிச அமைப்புக்களின் கிளர்ச்சிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரிய (North Korea) ஜனாதிபதி, கிம் ஜோங் உன்னால் தூண்டி விடப்பட்டதாக கூறப்படும் கிளர்ச்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் யூன் சுக் யோல் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ கட்டுப்பாடு
இதனையடுத்து, தென் கொரியாவின் தலைநகர் சியோல் உட்பட பல நகரங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
(3/11) ROK Army Chief-of-Staff Gen. Park An-su was tapped to implement the decision, suspending parliament and political parties, taking control over all media and banning the spread of so-called “fake news,” on penalty on arrest without warrant. pic.twitter.com/nltc6AVMwk
— Sputnik (@SputnikInt) December 3, 2024
இந்த நிலையில், சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மனிதக் கேடயம் அமைக்க முயற்சிக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பிறப்பித்துள்ள இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மையுடனான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர் இவ்வறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அந்நாட்டு மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் குவிந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |