இலங்கையில் எரிவாயுவின் விலைகள் திடீரென குறைப்பு
இலங்கையில் நேற்றையதினம் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று சிறியளவில் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று அதிகரித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ஆக மாற்றமடைந்துள்ளது.
5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,071 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் அதிகரித்த விலைகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
