யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு - மூவர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்றிரவு (23) கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேர் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாக கடற்றொழிலாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக காங்கேசன்துறையில் இருந்து மிக இரகசியமாக வரவழைக்கப்பட்ட கடற்படையின் அதிவிரைவு ரோந்து படகுகள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியை திடீர் சுற்றிவளைப்பு செய்துள்ளன.
இதன் போது சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri