யாழ்.சாவகச்சோி நகர வர்த்தகருக்கு திடீர் சுகயீனம்: குடும்பத்தில் நால்வருக்கு கோவிட் உறுதி
யாழ்.சாவகச்சோி நகரப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் அவர் உட்பட குடும்பத்தில் நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாவகச்சோி மருத்துவமனையில் வர்த்தகருக்கும் அவரது குடும்பத்திற்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அவர் உட்பட குடும்பத்தினர் நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri