யாழிலிருந்து சென்ற புகையிரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து
யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (09.11) பிற்பகல் கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரத நிலையம் வவுனியா, தாண்டிக்குளத்தை அண்மித்த போது புகையிரதத்தின் கொட்பொக்ஸ் பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதனை அவதானித்த புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டுத் தீயணைக்கும் பம்பியை செயற்படுத்தி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைந்தனர்.
இதனையடுத்து
புகையிரதத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சுமார் ஒரு
மணித்தியால தாமத்தின் பின் குறித்த புகையிரதம் கொழும்பு நோக்கி தனது பயணத்தைத்
தொடர்ந்தது.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
