ஈரானில் திடீர் தீ விபத்து: 32 பேர் பலி
ஈரானின் காஸ்பியன் கடல் பகுதியையொட்டிய கிலான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் திடீரென நேற்று(3) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்ததோடு 16 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஈரான் வயர் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசாரணை
இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்கிரவுடு நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளதோடு தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
