தென்னிலங்கையில் விமான பணிப்பெண்ணாக முயற்சித்த பெண் திடீர் மரணம்
பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.
விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயதுடைய, ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற யுவதியே இவ்வாறு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் கவலை
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வந்த ஒடித்யா சுவாச கோளாறு காரணமாக, கடந்த 21ஆம் திகதி மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இளம் அழகியான ஒடித்யா, சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், எனினும் அவருடைய வாழ்க்கை இவ்வளவு வேகமாக நிறைவுக்கு வரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் பல முறை ஒடித்யாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், சிகிச்சைகளின் பின்னர் அவர் குணமடைந்தாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்குப் பிறகு, மரணத்திடம் இருந்து தப்பிப் பிழைத்து வர அவருக்கு இயலாமல் போனதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
திடீரென அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக, பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒடித்யா, அடுத்த அரை மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய தந்தை விஜேசேகர ஒரு தொழிலதிபர் எனவும், 16 மற்றும் 13 வயதுகளையுடைய இரு சகோதரிகள் ஒடித்யாவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானப் பணிப்பெண்ணாக வருவதே ஒடித்யாவின் கனவு எனவும், மிக விரைவில் இந்த உலக வாழ்க்கைக்கு ஒடித்யா விடை கொடுத்ததை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் உறவினர்கள் கண்ணீரோடு தெரிவித்துள்னர்.
you may like this video