தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, வர்த்தக சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இலங்கை சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 112,500 ரூபாவுக்கும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் 121,500க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
உலக தங்க சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,818 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு விற்பனைச் செய்யப்படுகின்றதுடன், கடந்த ஒரு மாதத்துக்குள் 11 டொலர்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை, பொறுத்தவரையில் கடந்த டிசம்பர் மாதத்தில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 107,800 ரூபாவுக்கும் 24 பவுண் தங்கம் ஒரு பவுண் 116,500 ரூபாவுக்கும் விற்பனைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam