பொலிஸார் தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரையில் திடீர் விழாக்கோலம்
யாழ். தையிட்டி - திஸ்ஸ விகாரையில் பொலிஸாரின் முழுமையான பங்களிப்புடன், இன்று(13) விழாவொன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
திஸ்ஸ விகாரை
தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள், காணிகளின் உரிமையாளர்களுடனும், விகாரையின் நிர்வாகத்துடனும் இடம்பெற்று வருகின்றன.

அரச உள்ளக மட்டத்திலும் விகாரைக்கான தீர்வுக்காக சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, விகாரையைச் சார்ந்த மத அனுட்டான விழாவொன்றுக்கு அங்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டவிரோதத் திஸ்ஸ விகாரைக்கு எதிராக, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார், விழாவை முன்னின்று ஏற்பாடு செய்கின்றனமை பல்வேறு விசனங்களை உருவாக்கியுள்ளது.
பொலிஸார் தலைமையில் ஏற்பாடு
திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் முன்னெடுப்புக்களை வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, இராணுவத்தினரும், பொலிஸாரும், புலனாய்வாளர்களும் பிரதேச சபை உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், ஒளிப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அத்துடன், பலாலிப் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி அங்கு விரைந்து சென்று பிரதேச சபை உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பெயர் விவரங்களைப் பதிவு செய்து சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam