தொற்று விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் சுதத் சமரவீர
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றும் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீரவை அந்த பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு பதிலாக இந்த பதவிக்கு மற்றுமொரு சிரேஷ்ட தொற்று நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சுதத் சமரவீர இந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் அவரது சிரேஷ்ட தரத்திற்கு பொருத்தமான வேறு பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதுவரை வழங்கியுள்ள பல பரிந்துரைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கை மருத்துவர் சங்கம், விசேட மருத்துவ நிபுணர்கள் பல, ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றிடம் குறைகளை முன்வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதனடிப்படையில் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan