அறிகுறியற்ற கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு அனுமதி
அறிகுறியற்ற கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் தொற்று கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதன்படி பொரள்ளை ஆயுர்வேத போதனா மருத்துவமனை, நாவின்ன ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் யக்கல ஆயுர்வேத மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்லவெல ஆயுர்வேத மருத்துவ மையம் ஏற்கனவே கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
பண்டிகை காலத்தைத் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்துள்ளமைக் காரணமாக கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் ஏற்கனவே நெருக்கடி நிலையை அடைந்துள்ளன.
இதனையடுத்தே நெரிசலைக் குறைப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகள்
தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
