முடக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறானவர்கள் வெளியேற அனுமதி – பொலிஸார்
கோவிட் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அவசர நோயாளிகள் சிகிச்சைகளுக்காக வெளியேற அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக முடக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி எதனையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் சிறிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் முடக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோர் தவிர்ந்த ஏனையவர்கள் முடக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் அவசரமான தேவை என்றால் அருகாமையில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அது குறித்து அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 22 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
