மித்தெனிய முக்கொலையில் விசாரணைகளை தீவிரப்படுத்தும் பொலிஸார்!
மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலைகளை விசாரித்து வரும் பொலிஸ் குழுக்கள், இதுவரை சில வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மித்தெனிய படுகொலை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியினாலேயே துப்பாக்கிதாரிகளுக்கான ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியென சந்தேகிக்கப்படும் நபர் நேற்று கைது செய்ய்பபட்டிருந்தார்.
தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள்
மித்தெனிய பகுதியில் தலைமறைவாகியிருந்த 42 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டின் பின்னர் சந்தேகநபர் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மித்தெனிய பகுதியிலுள்ள கற்குழியொன்றுக்குள் கைவிப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுழியோடியின் ஒத்துழைப்புடன் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மித்தெனியவைச் சேர்ந்த அருண பிரியந்த என்ற கஜ்ஜாவும் அவரது இரண்டு இளம் குழந்தைகளும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
உரிமம் இல்லாமல் t 56 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தது உட்பட சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கஜ்ஜா மீதான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18 ஆம் திகதி இரவு, அவர் தனது மூன்று குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு இரவு வெளியில் சென்றபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதில் வீரகட்டியவின் மீகஸ்தாராவின் குடபிபுலுவைச் சேர்ந்த அருஷ்ய பிரியந்தா என்ற மித்தெனியகஜ்ஜா, அவரது 6 வயது மகள் அஹஸ்யா மற்றும் 9 வயது மகன் உதேஷ் ஆகியோர் சம்பவத்தில் இறந்தனர்.
கஜ்ஜா மற்றும் இரண்டு குழந்தைகள்
கஜ்ஜா மற்றும் இரண்டு குழந்தைகளின் கொலை குறித்து மித்தெனியபொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணையின் போது பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் விரிவான விசாரணைக்குப் பிறகு, கஜ்ஜா மற்றும் குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 37 வயது மற்றும் 39 வயதுடையவர்கள், வலஸ்முல்ல மற்றும் வீரகட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள்.
இவர்கள் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்த விசாரணையில் , மித்தெனியகஜ்ஜாவின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகின.
சந்தேக நபர்களை விசாரித்த பிறகு கைது செய்யப்பட்ட கடைசி நபரும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆவார்.
12 தோட்டாக்கள்
இந்த அதிகாரி மித்தெனிய பொலிஸாரால் வீரகெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர், வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக கைது செய்யப்பட்ட அதிகாரியே கொலைக்காக t 56 ரக துப்பாக்கியையும் 12 தோட்டாக்களை வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், கஜ்ஜா மற்றும் இரண்டு குழந்தைகளின் கொலை தொடர்பாக இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் விசாரணை நீடிக்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |