புற்றுநோயாளிகளுக்கு தரமற்ற மருந்து விநியோகம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை
இந்திய நிதியுதவியின் கீழ் புற்றுநோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் ரீடொக்சி மெப் எனும் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டு, போலி லேபிள் ஒட்டப்பட்டு புற்றுநோயாளிகளின் பாவனைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி
இதன் மூலம் சுமார் 11 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த தரமற்ற மருந்துகளை புற்றுநோயாளிகளுக்கு விநியோகித்திருப்பதன் மூலம் அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சுகாதார அமைச்சுக்கு எதிராக கருத்து வௌியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |