தையிட்டி விவகாரம் தொடர்பில் சட்டத்தரணி குருபரன் நீதிமன்ற சமர்ப்பணம்
தையிட்டி விவகாரத்தில் பொலிஸார் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ், வழக்கு தொடர்ந்தமை அடிப்படை மனித உரிமைகள் மீறல்களை நீதிமன்ற கட்டளைகள் மூலம் நிறைவேற்றும் உத்தி என சிரேஷ்ட சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மல்லாக நீதிமன்றத்தில் நேற்றைய தினம்(05.01.2026) தையிட்டி விவகாரத்தில் கைதானவர்கள் சார்பில் முன்னிலையாகிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
தையிட்டி விவகாரம்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது குற்றவியல் நடைமுறை, கோவை(106) மற்றும் (81)ன் கீழ் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.
இதே போன்று, கடந்த 2010 ஆம் ஆண்டு, இறுதி யுத்தம் நிறைவடைந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது காணி விடுவிப்புக்கான போராட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களுக்கு சார்பாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில், அப்போது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தனது கட்டளையில் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என உத்தரவிட்டார்.
அதே போன்று பல நீதிமன்றங்களில் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற தீர்ப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆர்ப்பாட்டங்கள் கலவரமாகும் போது, பொலிஸ் கட்டளை சட்டம் பிரிவு( 54) கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், தையிட்டி விவகாரத்தில் பொது தொல்லை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் என்ன என கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிவிலியன் ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட ஒழுங்கைப் பேணுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி கையேட்டில் பொலிஸார் ஆர்ப்பாட்டம் ஒன்றை சமரசத்தில் முடிவுறுத்த வேண்டும் என்ற எடுகோலிலே பார்க்க வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில் கலவரங்கள் ஏற்படும் என பொலிஸார் கருதினால் பொலிஸாரே அதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சட்ட நடவடிக்கை
அந்த வகையில், தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் நிலையில், போராட்டக்காரர்களால் இதுவரை கலவரங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் பொலிஸார் பொதுதொல்லை சட்ட ஏற்பாடுகளில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், தனது சமர்ப்பணத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொலிஸாரால் போடப்பட்ட நீதிமன்றக் கட்டளை 14 நாட்களை கடந்த நிலையில், வலுவிழந்த கட்டளையை சட்டத்தின்படி நீடிக்க முடியாது.
தையிட்டி போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் பெறப்பட்ட கட்டளை, பிரதிவாதிகளை அழைக்காமல் ஒரு தரப்பு சார்பான கட்டளை என்பதால் பிரிவு 106 (4) இன் கீழ் கட்டளையை நீக்க முடியும்.
மேலும் வழக்காளிகளாக நீதிமன்றத்தில் தோன்றியவர்கள் மீது இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்ததன் மூலம் பிணை வழங்கும்போது பிணையாளிகளை தேடுவதற்கான அசெளகரியங்களை ஏற்படுத்துவதுடன் போராட்ட ஓர்மத்தை குறைப்பதற்கான பொலிஸாரின் உத்தியே என மன்றில் தனது சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.
அதேபோன்று, சட்டத்தரணிகள் எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் தமது சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்துள்ளனர். அனைவரது சமர்ப்பணங்களை ஆராய்ந்து, மன்று எதிர்வரும் மாசி மாதம் 26 ஆம் திகதி கட்டளை வழங்குவதாகவும் எதிராளி அனைவரையும் சொந்த பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam