அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி உள்நுழைந்தது.. கண்டறியும் ரேடார் இலங்கையில் இல்லையா
அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒரு வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு இலங்கையின் பிரத்தியேக கடல் வலயத்திற்குள் பிரவேசிக்க முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் நமது கடல் எல்கலைக்கு அருகில் பிரவேசிக்கும் போது அதனைக் கண்டறியும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லையா, அதனைக் கண்டறியும் ரேடார்கள் நம்மிடம் இல்லையா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
தேசிய பாதுகாப்பு
மேலும், நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக உயிர்த்த மட்டத்தில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், நமது கடல் எல்லையை அண்மித்து ஒரு நீர்மூழ்கிக் கப்பில் உள்நுழைந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றது.

இந்த ஒரு சம்பவமே போதும் நம்முடைய தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை காட்டுகின்றது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒரு நீர்மூழ்கி எப்படி எமது கடல் எல்லைக்கருகில் வந்தது என்பது தொடர்பில் அரசாங்கம் நிச்சயம் விபரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri