வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைப்பு
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் ஆய்வு கூடம் இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது.
பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் கணித கூடம் என்பவற்றின் கதவை உடைத்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பரீட்சைப் பொறுப்பதிகாரி
இது குறித்து, குறித்த நிலையத்திற்கு பொறுப்பான பரீட்சைப் பொறுப்பதிகாரி மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளார் பாடசாலைக்கு சென்று நிலமையை பார்வையிட்டிருந்த போதும் மாணவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுகப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
