அகில இலங்கை ரீதியில் நடிப்பு திறமையால் சாதனை படைத்த மாணவர்கள்
கிளிநொச்சியை சேர்ந்த மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுடைய சாதனை தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
“கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்” மாணவர்களின் இந்த வெற்றி, தமிழர்களுக்கு பெறுமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான நாடகப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் "விளை நிலம் நாடகம் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

இதன்படி,
சிறந்த நாடகக் கதை - முதலாம் இடம் (அகில இலங்கையில் முதலிடம்!), சிறந்த நாடகத் தயாரிப்பு - இரண்டாம் இடம், சிறந்த நடிகன், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகன், சிறந்த இசையமைப்பு.
செம்மணி பயங்கரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்குச் சென்ற இரகசிய கடிதம்! நடமாடும் காலத்தின் சாட்சியம்..