பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி மாணவி
பிரித்தானியா- நாட்டிங்ஹாம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவதில் கொல்லப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டிங்ஹாம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி என தெரியவந்துள்ளது.
குறித்த கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி கிரேஸ் குமார்(19) எனவும் மற்றையவர் உயிரிழந்த மாணவியின் நண்பரான பார்னபி வெபர் எனவும் இருவரும் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யும் தீவிர முயற்சி
முதலில் தாக்குதலுக்குள்ளான பார்னபி வெபரை காப்பாற்றும் நோக்கில் சென்ற போதே கிரேஸ் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கொலையுடன் தொடர்புடைய நபர் கொலை இடம்பெறுவதற்கு சில மணிநேரம் முன்னர் 54 வயதான ஒருவரை கொன்றுவிட்டு, அவரது வாகனத்தை திருடிச் சென்றதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வாகனம் பாதசாரிகள் மூவர் மீது மோதியதில், ஒருவர் ஆபத்தான நிலையிலும், எஞ்சிய இருவர் சிறிய காயங்களுடனும் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொலையாளியை கைது செய்யும் தீவிர முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டதை அடுத்து 31 வயதான குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து தேசிய ஹொக்கி அணி
கொலை செய்யப்பட்ட பார்னபி வெபர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் எனவும், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்காக விளையாடியுள்ளார் எனவும் கூறுகின்றனர்.
30 போட்டிகளில் களமிறங்கியுள்ள பார்னபி வெபர் மொத்தம் 622 ஓட்டங்களும் 29 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
கிரேஸ் குமார் லண்டனில் Southgate அணிக்காக ஹொக்கி விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி, இங்கிலாந்து தேசிய ஹொக்கி அணியிலும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுமார் 4 மணியளவில், கிரேஸ் குமாருடன் பார்னபி வெபர் வீடு திரும்பும் நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |