மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 71 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு (photos)
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களின் சித்தி வீதம் கடந்த வருடத்தைவிட இம்முறை சகல துறைகளிலும் அதிகரித்துள்ளதாகவும் 71 வீதமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளனர் எனவும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை வலயக்கல்விப் பணிப்பாளர் இன்று (05.09.2023) சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த வருடம் 65 வீதத்திலிருந்து இம்முறை 71 வீதமாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பல்கலைக் கழகங்களுக்குச் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள் விபரம்
அதிலும் இம்முறை உயிரியல் துறையில் சித்தி வீதம் அதிகரித்து காணப்படுகின்றது. 40 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

புனித மிக்கல் கல்லூரி மாணவன் துரைராஜசிங்கம் இமையவன் மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். அதே பாடசாலையில் உயிரியல் துறையில் இம்முறை செசாங்கன் என்ற மாணவன் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மட்டு நகரின் பிரபல பாடசாலைகளான புனித மிக்க கல்லூரி, வின்சன் தேசிய பெண்கள் பாடசாலை, சிசிலியா மகளிர் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை மட்டக்களப்பு கல்வி
வலயத்தில் இருந்து 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் உயிரியல் துறையில் பல்கலைக்
கழகங்களுக்குச் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.





கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam