சீன நாட்டு முதலீட்டாளர்களுடன் சந்திப்பு : அமைச்சர் டக்ளஸ்
சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச் செய்வதற்கும், தமது படகுகளைக் கொண்டு பிடிக்கப்படும் மீன்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சீன முதலீட்டாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாக இருந்தால் இத்துறையில் பாரிய முதலீடுகளை செய்வதற்கு தாம் தயார் என குறிப்பிட்டுள்ளனர்.
திட்டம் குறித்து அமைச்சர் ஆய்வு
இதற்கமைய அவர்கள் தமது திட்டவரைபை தமக்கு கிடைக்கச் செய்தால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த மற்றும் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
