யாழில் பாடசாலைகள் திறக்காததால் திரும்பிச் சென்ற மாணவர்கள்
யாழில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் சிலர் வருகை தந்த நிலையில் பாடசாலை திறக்காததால் மாணவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோவிட் நிலைமையால் நீண்டகாலமாகத் திறக்காமலிருந்த, 200 மாணவர்களுக்கும் குறைந்த ஆரம்பநிலை பாடசாலைகளை இன்றையதினம் (21) திறக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு காரணமாகப் பாடசாலைகள் எவற்றையும் திறக்க வேண்டாம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் பாடசாலைகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
இந்நிலையிலேயே யாழில் பாடசாலை திறக்காததால் மாணவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன் இன்று காலை, பொலிஸார் , மற்றும் வலயக்கல்வி உத்தியோகஸ்த்தர்கள் பாடசாலைகளைப்
பார்வையிட்டு பாடசாலைகளின் விபரங்களைத் திரட்டிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri