யாழ். பல்கலையில் அமைதி தூபி கட்டுவதற்கு மாணவர்கள் மறுப்பு!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத்தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலேயே தூபி மீள கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அமைதி தூபி’ எனும் பெயரிலோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் இடித்தழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்படவுள்ள தூபியினை ‘அமைதி தூபி’ எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதியளித்துள்ள நிலையிலேயே மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
