மலையக மாணவர்கள் சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும்! (Video)
மலையக மாணவர்கள் மலையக சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ (J.P. Whole lsland) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் ம.மா/ஹ/ குயில்வத்தை தமிழ் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர், “நான் இந்த இடத்தில் பேசுவதற்குக் காரணம் உங்களைப் போன்று சிறந்த முறையில் கல்வி கற்றதனால்தான். ஆகவே, பலர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல உதவிகளைச் செய்து வருகின்றோம்.
அதனைப் பெற்று நீங்களும் இந்த சமூகத்திற்கு பயனுள்ள மனிதர்களாக வாழவேண்டும். இன்று கடுமையான பாதைகளைக் கடந்து வந்தவர்கள் தான் உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். மலையகத்தில் கலைப்பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர்.
அதனையிட்டு நாங்கள் சந்தோசமடையும் அதேவேளை, எதிர்காலத்தில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல் பொருளாதாரத் துறைகளில் நாம் விருத்தி காணவேண்டும். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் ஊடாக தான் வர்த்தகத் துறையில் தேடி நுழைய வேண்டும்.
அப்போதுதான் தம்மை தாம் உயர்த்திக் கொள்ள முடியும். ஹட்டன் பகுதியில் பல பிரபல பாடசாலைகள் பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற துறைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைத்த போதிலும் முழு மலையகத்தைப்பொறுத்தமட்டில் அது போதுமானதாக இல்லை.
ஆகவே, நீங்கள் தங்களுக்கு செய்யும் உதவி, சிறந்த முறையில் கல்வியைப் பெற்று இந்த சமூகத்தை மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam