இலங்கையில் 29 சதவீதமான மாணவர்களின் நிலை! வெளியான அறிக்கை
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி, இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த விடயம் 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கை
இந்த சுகாதார ஆய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
