மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க அதிபர்களுக்கு அனுமதியில்லை
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவ மாணவியரை அழைப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு, தெற்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களில் தவணைப் பரீட்சை நிறைவடைந்துள்ள காரணத்தினால் தரம் 6 முதல் 13 வரையிலான மாணவ மாணவியரைப் பாடசாலைக்கு அழைப்பதற்கு அனுமதியில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு காரணமாகப் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை வழங்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது.
இதேவேளை, மேல், மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் பரீட்சை நடைபெறும் மாணவ மாணவியர் மட்டுமே பாடசாலைகளுக்கு அழைக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து ஏனைய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
