கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்(Video)

Protest Parents Students Trincomalee District
By Kanamirtha Mar 16, 2022 10:36 AM GMT
Report

திருகோணமலை - புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதான கதவை மூடி மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி இன்று (16) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

திறமையான மாணவர்கள் பலர் உள்ளோம். ஆனால் வழிநடாத்த ஆசிரியர்கள்தான் இல்லை, 1200 மாணவர்களுக்கு 24 ஆசிரியர்கள் எந்த விதத்தில் நியாயம், திறமையான மாணவர்களை வழி நடாத்த ஆசிரியர் தா, இடமாற்ற அதிகாரம் உள்ள ZDEக்கு ஆசிரியர்கள் தர அதிகாரம் இல்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1905 ஆம் ஆண்டு புல்மோட்டையில் முஸ்லிம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்போது தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டிருந்த நிலையில், 1200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 64 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 24 ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.


தங்களது மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலதடவைகள் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாகத் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரனைக் கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,

புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் 49 ஆசிரியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட போதும் 29 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

நேற்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பட்டதாரி நியமனம் பெற்ற 07 அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை நியமித்துள்ளதுடன் திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரையும் புல்மோட்டை அறபா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரையும் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US