உணவு விஷமாகியதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
புத்தல- பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உணவு விஷமாகியதால் 17 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின் மாணவர்கள் சுகயீனமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான தரத்தில் உணவு இல்லாமை

இலங்கை மக்கள் உட்கொள்ளும் உணவு முறையான தரத்தில் இல்லாமையினால் அதிகளவானோர் தொற்றாத நோய்களுக்கு உள்ளாவதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
உணவுக்கு உரிய தர நிர்ணயம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri