இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் உணவுகள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை மக்கள் உட்கொள்ளும் உணவு முறையான தரத்தில் இல்லாமையினால் அதிகளவானோர் தொற்றாத நோய்களுக்கு உள்ளாவதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலந்த லியனகே தெரிவித்துள்ளார்.
உணவுக்கு உரிய தர நிர்ணயம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் நிலந்த லியனகே இதனை குறி்பபிட்டுள்ளார்.
உணவில் நச்சுப் பொருள்
“இலங்கையில் பெரும்பாலும் இந்த தொற்றாத நோய்களைப் பற்றிப் பேசும்போது உணவுதான் முதன்மையானது.உணவினால் ஏற்படும் இந்த நோய்களில் மிக முக்கியமானது உணவு சரியான தரத்தில் இல்லாமல் இருப்பதுதான். தரம் சோதிக்கப்படுகிறது. சோதனைக்கு உட்படுத்தப்படாமல் எத்தனை பொருட்கள் உட்கொள்கின்றனர்?, இவற்றை உட்கொள்பவர்கள், மருத்துவமனை மற்றும் சிகிச்சையின் அளவு என்ன?, இறப்பு விகிதம் என்ன? ஆகிய விடங்கள் பற்றி மக்கள் அறியாமல் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
வெளியில் இருந்து பார்த்தால் உணவு நன்றாக இருக்கும். அப்போது நமக்குத் தெரியாமல் உணவில் உள்ள சில நச்சுப் பொருட்கள் உட்கொண்டு மக்கள் நோய்வாய்ப்படுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.