பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்கள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி(Photos)
மட்டக்களப்பு- வீரநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உண்ட 64 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(14) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 9 வரையான 64 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வி அமைச்சின் மதிய போசன உணவு வழங்கும் திட்டத்தின்கீழ் இங்கு கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு, பாடசாலை நிர்வாகம் தனியார் ஒருவரிடமிருந்து உணவைப் பெற்று வழங்கி வருகிறது.
இந்த நிலையில் வழமைபோல இன்று காலை சோறும், சோயாமீற் கறியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் உட்கொண்ட பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்தமையால் அங்கு மாணவர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பாடசாலையிலிருந்து வீடு சென்ற ஏனைய 55 மாணவர்களும் மயக்கமடைந்தமையால் அவர்களையும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொதுச்சுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 13 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
