வடமாகாண கரப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு
வடமாகாண விளையாட்டுப்போட்டியில் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தினை சேர்ந்த சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (24.07.2024 ) பாடசாலையில் நடைபெற்றுள்ளது.
வடமாகாண கரப்பந்தாட்டம் மற்றும் மல்யுத்த போட்டிகள் கடந்த 18தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் புத்தூர் மற்றும் ஆவரங்கால் போன்ற இடங்களில் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி மற்றும் நடராஜா இராமலிங்க வித்தியாலம் ஆகிய இரு பாடசாலைகளிலும் நடைபெற்றுள்ளன.
இறுதிப்போட்டி
வடமாகண பெண்கள் அணியில் 38 பாடசாலை அணிகள் பங்குபற்றி இருந்தன.
இந்தப்போட்டியில் 16 வயது கரப்பந்தாட்ட பிரிவு பெண்கள் இறுதிப்போட்டியில் வற்றாப்பளை மகாவித்தியால அணியுடன் மோதி முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் வெற்றி பெறற்றுள்ளது.
18 வயது கரப்பந்தாட்ட பெண்கள் இறுதிப்போட்டியில் மன்னார் தட்சணாமருதமடு பாடசாலையுடன் மோதி கலைமகள் வித்தியாலயம் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றிபெற்ற வீராங்கனைகள்
இவ்வாறு வடமாகாணத்தில் ஒரு பாடசாலையில் இருந்து இரண்டு அணிகள் கரப்பந்தாட்ட போட்டியில் பங்கு பெற்ற மாகாணமட்டத்தில் முதலிடம் பிடித்த பெருமைக்குரிய பாடசாலையாக முள்ளியவளை கலைமகள் வித்தயாலம் காணப்படுகின்றது.
வெற்றிபெற்ற வீராங்கனைகளையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மல்யுத்தபோட்டியிலும் வடமாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீராங்கனைகளும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |