புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி நீரில் மூழ்கி பலி
திருகோணமலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி வீடு திரும்பிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தனது பெற்றோர்களுடன் நேற்று முன்தினம் நிலாவெளி ஏறக்கண்டி அணைக்கட்டுக்கு அருகில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவர்களில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒரு மாணவி ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குளிக்க சென்றவர்களில் 4 மாணவிகள் இருந்ததாகவும் அவர்களில் ஒருவரின் பெற்றோர் இவ்வாறு குளிப்பதற்காக அழைத்து சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி திருகோலை ஆனந்தம்குளம் பாடசாலை மாவத்தையை சேர்ந்த 10 வயதான கே.ஏ.ஓஷினி அஸ்வானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை மாத்தறை – வெலிகம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெலிகம கடற்பகுதியில் 4 சிறுமிகள் அவர்களது பெற்றோருடன் குறித்த பகுதியில் நீராடச் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தற்போதைய ஆயுதம் என்ன? - இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
