தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலையில் கிடைத்த அங்கீகாரம்
வவுனியாவில் இளம் கலைஞர் "மாயா சித்தரீ" இன் "நர்த்தனோவியம்" ஓவிய நூல் வெளியீடும் கண்காட்சியும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகள் நேற்று(02.07.2026) வவுனியா தெற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வவுனியாவை சேர்ந்த இளம் மாணவியும் ஓவியருமான சிவதர்சன் நர்த்தனாவின் மாயா சித்தரீயின் முயற்சியில் உருவான "நர்த்தனோவியம்" ஓவிய நூல் வெளியீடும் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
14 வயது மாணவியின் சாதனை
தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் A.K குமார சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர், “மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்... கனவு மெய்ப்பட வேண்டும்" என மாணவிக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிகழ்வில் விசேட விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ஜெ. பத்மாவதி ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வித்யாபரன் விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் Dr. A.S. அன்ரூ அனெஸ்லி பிராந்திய நிர்வாகி IDM Nations Campus International ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.



