தொலைபேசியில் பதிவு செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி
காலி - உடுகமை, கல்லந்தல பிரதேசத்தில் வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயதான பாடசாலை மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைகளுக்காக இன்று கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையை பயன்படுத்தி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவி தற்கொலை செய்துக்கொள்ளும் முன்னர் எடுத்ததாக கூறப்படும் சேலையை பயன்படுத்தி கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், மாணவியின் கையடக்க தொலைபேசியில் இருந்ததாக உடுகமை பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த மாணவி கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதில் அடிமையானவராக இருந்துள்ளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ளும் முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்யும் காணொளிகளையும் பார்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடுகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
