கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் கொலை
நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்
நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (Stanley Steph Phil) என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம்
இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
